Showing posts with label இன்று - 10.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 10.03.2017. Show all posts

Friday, March 10, 2017

இன்று - 10.03.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
10.03.2017, மாசி 26, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி இரவு 08.50 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி, ஆயில்யம் நட்சத்திரம் மாலை 04.58 வரை  பின்பு மகம், நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, பிரதோஷம் சிவ வழிபாடு நவகிரக வழிபாடு நல்லது, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   
சுக்கி (வ)
செவ்


சூரிய கேது 
புதன் 
திருக்கணித கிரக நிலை
10.03.2017


சந்தி

ராகு
சனி
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  10.03.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று கால தாமதமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கப்பெறும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி அடைவதற்கான சூழ்நிலை உருவாகும்.
மிதுனம்
இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு சில இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உங்களின் பிரச்சனைகள் தீர குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள்.
கடகம்
இன்று குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் மந்த நிலை காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். தொழில் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி
இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். குடும்பத்தில் பெண்களால் வீண் செலவுகள் உண்டாகும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன்சுமை குறையும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.
மகரம்
இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். மாலை 04.58 பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமாக இருப்பது நல்லது, மன கவலை உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருள் வீடு சேரும்.
மீனம்

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மை அடையலாம்.