Showing posts with label இன்று - 10.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 10.04.2017. Show all posts

Monday, April 10, 2017

இன்று - 10.04.2017



வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

ராஜா, எஸ்.பி.பி மோதல் ஏன்?-             அம்சி விவேகானந்தன்

கும்பிட வேண்டிய குலதெய்வம் எது? (வாரம் ஒரு பரிகாரம்)-    விசு அய்யர்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

கல்விக்கு ஜோதிடம் அவசியம்!-       சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அரிட்டமும் ஆயுளும்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

வேண்டுதல்களை நிறைவேற்றும் முத்திரைகள்! – சித்தயோகி சிவதாசன் ரவி

எமகண்டம், குளிகை காலம்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்!-  -சரவணன் Gendral Sec ICAS

சித்திரை 1-ல் மலரும் “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்!-     -
முனைவர் முருகுபாலமுருகன்

திருவோணத்தினரின் திறன் பெருக்கும் பரிகாரங்கள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

வெளிநாடு செல்லும் யோகமுடையவர் யார்?- ஜோதிடச்சுடர் ந. ஞானரதம்

வார ராசிபலன் (09-04-2017 முதல் 15-04-2017 வரை) பங்குனி 27 முதல் சித்திரை 2 வரைமுனைவர் முருகுபாலமுருகன்

இன்று -  10.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
10.04.2017, பங்குனி - 28, திங்கட்கிழமை, சதுர்த்தசி திதி காலை 10.23 வரை பின்பு பௌர்ணமி, அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 03.37 வரை பின்பு சித்திரை, சித்தயோகம் பின்இரவு 03.37 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, பௌர்ணமி.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சூரிய
சுக்கி(வ)
செவ்
புதன்(வ)


கேது 
திருக்கணித கிரக நிலை
10.04.2017



ராகு
சனி(வ)
 

               
குரு  (வ)
சந்தி

இன்றைய ராசிப்பலன் -  10.04.2017

மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
ரிஷபம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.
கடகம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.
சிம்மம்
இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார ரீதியாக வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்லது நடக்கும்.
விருச்சிகம்
உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
மகரம்
இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.
மீனம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நல்ல பலனை தரும்.