Showing posts with label இன்று - 10.05.2017. Show all posts
Showing posts with label இன்று - 10.05.2017. Show all posts

Wednesday, May 10, 2017

இன்று - 10.05.2017

இன்று -  10.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

சிறுகக் கட்டி பெருக வாழ்!-                முனைவர் முருகுபாலமுருகன்

கனவுக் கல்வி், கல்லூரியை கைவசமாக்கும் வழி என்ன? (வாரம் ஒரு பரிகாரம்)-                                  விசு அய்யர்

வார ராசிபலன் (14-05-2017 முதல் 20-05-2017 வரை) சித்திரை 31 முதல் வைகாசி 06 வரை                                    முனைவர் முருகு பாலமுருகன்

கற்காமல் கல்விநிலையம் நடத்துபவர்!-  சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

நிறைய பொன் சேர்த்து புதைத்து வைக்கும் ஜாதகர்! -                                                                       பிராஜசேகரன் M.Phil Astro

அமானுஷ்ய தோஷங்கள் தீர்க்கும் அபுர்வ மூலிகைகள்! – கடகம் இராமசாமி

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

கொடுத்துக் கெடுக்கும் கோட்சாரம்!-   -      சரவணன் Gendral Sec ICAS

நட்சத்திரங்கள் தரும் நோய்கள்!-- - -           டாக்டர் இராரகு M,Sc Astro

வியாபாரத்தில் வெற்றி தரும் குறியீடு! –    சித்தயோகி சிவதாசன் ரவி

ரேவதி நட்சத்திரப் பரிகாரங்கள்!            ஜோதிஷண்முகம்


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
10-05-2017, சித்திரை-27, புதன்கிழமை, பௌர்ணமி திதி பின் இரவு 03.12 வரை பின்பு தேய்பிறை பிரதமை. சுவாதி நட்சத்திரம் பகல் 02.34 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சித்ரா பௌர்ணமி விரதம். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சுக்கி

சூரிய
புதன்
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
10.05.2017



ராகு
சனி  (வ)

சந்தி  
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  10.05.2017

மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால்  மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருள் சேரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
ரிஷபம்
இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். உங்கள் பிரச்சனைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிட்டும். திடீர் பணவரவு உண்டாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பணியாட்களின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம்.
கடகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
சிம்மம்
இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடல்நிலை சீராகும்.
கன்னி
இன்று உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில்  தொழிலாளர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுப்பாடு ஏற்படும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நல்ல பலன்கள் ஏற்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். நீங்கள் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் பெருகும்.
கும்பம்
இன்று வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மன அமைதி குறையும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.