Showing posts with label இன்று - 10.08.2017. Show all posts
Showing posts with label இன்று - 10.08.2017. Show all posts

Thursday, August 10, 2017

இன்று - 10.08.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com




இன்றைய  பஞ்சாங்கம்
10-08-2017, ஆடி- 25, வியாழக்கிழமை, திரிதியை திதி இரவு 12.33 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. நாள் முழுவதும் பூரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.




சுக்கி  
சந்தி
கேது 
திருக்கணித கிரக நிலை
10.08.2017

சூரிய செவ்

புதன்
ராகு

சனி  (வ)
               
குரு

இன்றைய ராசிப்பலன் -  10.08.2017
மேஷம்
இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கப்பெறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன்கள் கிட்டும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகலாம். செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிலும் பொறுமை தேவை.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.
சிம்மம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபார ரீதியாக அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். திடீர் பணவரவு உண்டாகும். கடன்கள் குறையும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
துலாம்
இன்று காலையிலே இனிய செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியால் உங்கள் பிரச்சனைகள் குறையும். சிலருக்கு கல்வி சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருள் சேரும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்து வேறுப்பாட்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நல்ல பலன்கள் ஏற்படும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மகரம்
இன்று உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேரும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள்.
மீனம்


இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை அளிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பணியாட்களின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.