Showing posts with label இன்று - 11.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 11.01.2017. Show all posts

Wednesday, January 11, 2017

இன்று - 11.01.2017

இன்று -  11.01.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
11.01.2017, மார்கழி 27, புதன்கிழமை, சதுர்த்தசி திதி இரவு 07.52 வரை பின்பு வளர்பிறை பௌர்ணமி, திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.17 வரை பின்பு புனர்பூசம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1,. பௌர்ணமி ஆருத்ரா தரிசனம் சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00






சந்தி
கேது  செவ்
சுக்கி  
திருக்கணித கிரக நிலை
11.01.2017





ராகு
புதன்
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் 11.01.2017

மேஷம்
இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருள் வாங்கி சேர்ப்பீர்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவாய் இருப்பார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும்.
மிதுனம்
இன்று உங்கள் மனதிற்கு புதிய தெம்பு கிடைக்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டம் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். தொழிலில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
கன்னி
இன்று நீங்கள் எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்வீர்கள். நண்பர்கள் இன்று உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
துலாம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். அரசு வழி உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதமாகும். தெய்வ வழிபாடுகளில் அதிகம் ஈடுபாடு காட்டுவீர்கள்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும்.
தனுசு
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் கல்விக்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.
மகரம்
இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். மன அமைதி இருக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.
மீனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் தேவையற்ற அலைச்சலால் டென்ஷன் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.