Showing posts with label இன்று - 12.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 12.02.2017. Show all posts

Sunday, February 12, 2017

இன்று - 12.02.2017

இன்று -  12.02.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
12.02.2017, தை 30, ஞாயிற்றுகிழமை, துதியை திதி பின்இரவு 04.41 வரை பின்பு தேய்பிறை திரிதியை, மகம் நட்சத்திரம் காலை 08.39 வரை பின்பு பூரம்மரண யோகம் காலை 08.39 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

செவ்
சுக்கி



கேது 
திருக்கணித கிரக நிலை
12.02.2017


சூரிய புதன்
ராகு சந்தி
சனி 

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  12.02.2017
மேஷம்  
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
 ரிஷபம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
சிம்மம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
கன்னி
இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படவேண்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனைகள் குறையும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
தனுசு
இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
கும்பம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.
மீனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.