Showing posts with label இன்று - 12.06.2017. Show all posts
Showing posts with label இன்று - 12.06.2017. Show all posts

Monday, June 12, 2017

இன்று - 12.06.2017

இன்று -  12.06.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
12-06-2017, வைகாசி -29, திங்கட்கிழமை, திரிதியை திதி பின்இரவு 01.18 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பூராடம் நட்சத்திரம் பகல் 10.50 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2, ஜீவன் - 1.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.



சுக்கி
சூரிய புதன்
செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
12.06.2017



ராகு
சனி(வ) சந்தி
 

குரு

இன்றைய ராசிப்பலன் -  12.06.2017
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் தாமத பலனே கிட்டும். உங்கள் ராசிக்கு மாலை 5.29 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும்பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
மிதுனம்
இன்று தொழில் ரீதியாக அலைச்சலுக்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சனைகள் தீரும். உங்கள் ராசிக்கு மாலை 5.29 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் உண்டாகும். சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடப்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மன அமைதி நிலவும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
கன்னி
இன்று பிள்ளைகளின் உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற  செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லத்தை தேடி வரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
தனுசு
இன்று வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும்.
மகரம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். உற்றார் உறவினர்களுடன் இருந்த மன-ஸ்தாபங்கள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கடன் பிரச்சனை குறையும்.
கும்பம்
இன்று வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறைந்து லாபம் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் வெளி வட்டார நட்பு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
மீனம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.