Showing posts with label இன்று - 12.08.2017. Show all posts
Showing posts with label இன்று - 12.08.2017. Show all posts

Saturday, August 12, 2017

இன்று - 12.08.2017

இன்று -  12.08.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com




இன்றைய  பஞ்சாங்கம்
12-08-2017, ஆடி- 27, சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 10.57 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 06.13 வரை பின்பு ரேவதி நட்சத்திரம் பின்இரவு 05.50 வரை பின்பு அசுவினி. சித்தயோகம் காலை 06.13 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 05.50 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சந்தி


சுக்கி  
கேது 
திருக்கணித கிரக நிலை
12.08.2017

சூரிய செவ்

புதன்
ராகு

சனி  (வ)
               
குரு

இன்றைய ராசிப்பலன் - 12.08.2017
மேஷம்
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். சேமிப்பு கரையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வருமானம் இரட்டிப்பாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவலை உண்டாகும். உத்தயோகத்தில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
கன்னி
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருகக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப்பின் முன்னேற்றம் ஏற்படும்வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். சேமிப்பு உயரும்.
மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.