Showing posts with label இன்று - 12.10.2017. Show all posts
Showing posts with label இன்று - 12.10.2017. Show all posts

Thursday, October 12, 2017

இன்று - 12.10.2017

இன்று -  12.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
12-10-2017, புரட்டாசி -26, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 06.56 வரை பின்பு அஷ்டமி திதி பின்இரவு 04.59 வரை பின்பு தேய்பிறை நவமி. திருவாதிரை நட்சத்திரம் காலை 08.57 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் காலை 08.57 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1/2. கால பைரவர்க்கு உகந்த நாள். தனிய நாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.






சந்தி
               
திருக்கணித கிரக நிலை
12.10.2017

ராகு
கேது
செவ்  


சனி 

குரு
 சூரிய சுக்கி புதன்

இன்றைய ராசிப்பலன் -  12.10.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் மூலம் சுப செய்தி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் தீரும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை இருக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொண்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
சிம்மம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு தாரளமாக இருக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். சுபகாரியங்கள் நடைபெறும்.
விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தனுசு
இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வருமானம் பெருகும்.
மகரம்
இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன்கள் தீரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.
மீனம்

இன்று வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேறலாம். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.