Showing posts with label இன்று - 13.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 13.02.2017. Show all posts

Monday, February 13, 2017

இன்று - 13.02.2017

இன்று -  13.02.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
13.02.2017, மாசி 1, திங்கட்கிழமை, திரிதியை திதி பின்இரவு 04.57 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி,                பூரம் நட்சத்திரம் காலை 08.59 வரை பின்பு உத்திரம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

செவ்
சுக்கி



சூரிய கேது                 
திருக்கணித கிரக நிலை
13.02.2017

புதன்
ராகு சந்தி
சனி

 

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  13.02.2017
மேஷம்
இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பாட்டால் லாபம் அடைவீர்கள். பணிச்சுமை குறையும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும்.        உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்ற ஏற்படும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும்.
துலாம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
தனுசு
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் உடன் பணிபரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு மாலை 3.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கும்பம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும்.
மீனம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.