Showing posts with label இன்று - 13.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 13.04.2017. Show all posts

Thursday, April 13, 2017

இன்று - 13.04.2017

இன்று -  13.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

இறைவனிடம் வேண்டுதல் செய்யும் முறை! – சித்தயோகி சிவதாசன் ரவி

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

வார ராசிபலன் (16-04-2017 முதல் 22-04-2017 வரை) சித்திரை 3 முதல் சித்திரை 9 வரை
முனைவர் முருகுபாலமுருகன்

வெளிநாட்டில் உயர்கல்வி யோகம்!-   சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அவிட்டத்தினர் தெவிட்டாத சுகம் பெற! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

யோக அரிட்டங்கள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

 “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்!- சென்ற இதழ் தொடர்ச்சி
முனைவர் முருகுபாலமுருகன்

பிரேத தோஷம் தீர்க்கும் வழிகள்! (வாரம் ஒரு பரிகாரம்)-   விசுஅய்யர்

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்?- -சரவணன் Gendral Sec ICAS

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
13-04-2017, பங்குனி-31, வியாழக்கிழமை, துதியை திதி பகல் 03.11 வரை பின்பு தேய்பிறை திரிதியை. சுவாதி நட்சத்திரம் காலை 08.05 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் காலை 08.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சூரிய
சுக்கி(வ)
புதன்(வ)
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
13.04.2017



ராகு
சனி(வ)
 

சந்தி
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  13.04.2017

மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில்  எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப்பெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.
மிதுனம்
இன்று மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
கன்னி
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஓரளவு தீரும்.
துலாம்
இன்று வெளியூர் பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். பணபற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும்.
தனுசு
இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாய் இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் தீரும். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.
கும்பம்
இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.
மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.