Showing posts with label இன்று - 13.05.2017. Show all posts
Showing posts with label இன்று - 13.05.2017. Show all posts

Saturday, May 13, 2017

இன்று - 13.05.2017

இன்று -  13.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

சிறுகக் கட்டி பெருக வாழ்!-                முனைவர் முருகுபாலமுருகன்

கனவுக் கல்வி், கல்லூரியை கைவசமாக்கும் வழி என்ன? (வாரம் ஒரு பரிகாரம்)-                                  விசு அய்யர்

வார ராசிபலன் (14-05-2017 முதல் 20-05-2017 வரை) சித்திரை 31 முதல் வைகாசி 06 வரை                                    முனைவர் முருகு பாலமுருகன்

கற்காமல் கல்விநிலையம் நடத்துபவர்!-  சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

நிறைய பொன் சேர்த்து புதைத்து வைக்கும் ஜாதகர்! -                                                                       பிராஜசேகரன் M.Phil Astro

அமானுஷ்ய தோஷங்கள் தீர்க்கும் அபுர்வ மூலிகைகள்! – கடகம் இராமசாமி

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

கொடுத்துக் கெடுக்கும் கோட்சாரம்!-   -      சரவணன் Gendral Sec ICAS

நட்சத்திரங்கள் தரும் நோய்கள்!-- - -           டாக்டர் இராரகு M,Sc Astro

வியாபாரத்தில் வெற்றி தரும் குறியீடு! –    சித்தயோகி சிவதாசன் ரவி

ரேவதி நட்சத்திரப் பரிகாரங்கள்!            ஜோதிஷண்முகம்


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
13-05-2017, சித்திரை-30, சனிக்கிழமை, துதியை திதி காலை 07.52 வரை பின்பு தேய்பிறை திரிதியை. கேட்டை நட்சத்திரம் இரவு 11.11 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

சுக்கி

சூரிய
புதன்
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
13.05.2017



ராகு
சனி  (வ)
சந்தி
               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  13.05.2017

மேஷம்
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
ரிஷபம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ற உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். கடன் பிரச்சனைகள் குறையும்.
மகரம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
மீனம்

இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.