Showing posts with label இன்று - 13.06.2017. Show all posts
Showing posts with label இன்று - 13.06.2017. Show all posts

Tuesday, June 13, 2017

இன்று - 13.06.2017

இன்று -  13.06.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

வழக்கில்லா வாழ்க்கைக்கு வழி! – (வாரம் ஒரு பரிகாரம்)-        விசு அய்யர்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -        -டாக்டர் இரா. ரகு M,Sc Astro

அரவணைத்துக் காக்கும் அன்ன தாதா! –         பி. ராஜசேகரன் M.Phil Astro

இதய நோய் போக்கும் பரிகாரம்! -                     அம்சி விவேகானந்தன்

நிமித்தம்             -                        ஜி. ஆர். வெங்கடேஸ்வரன்

பஞ்சாங்கத்தின் பயனுள்ள விஷயங்கள்! - 
மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

தீ விபத்துக்களை ஏற்படுத்தும் கேது! -                அஸ்ட்ரோ சுந்தரராஜன்

திக் பலம்!            --                       முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

12 லக்னப் பலன்கள்!-                           முனைவர் முருகு பாலமுருகன்

நட்பு, பாசம், தனிமை, இளமை, நடுநிலை, தியாகம், தர்மம்! –     
சித்தயோகி சிவதாசன் ரவி

பிரபுத்துவ யோகம்!-                 சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

வார ராசிபலன் (11-06-2017 முதல் 17-06-2017 வரை) வைகாசி 28 முதல் ஆனி 03 வரை
முனைவர் முருகு பாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
13-06-2017, வைகாசி- 30, செவ்வாய்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.03 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 01.22 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்டயோகம் பகல் 01.22 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. சங்கடஹரசதுர்த்தி. விநாயர் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.



சுக்கி
சூரிய புதன்
செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
13.06.2017


சந்தி
ராகு
சனி(வ)
 

குரு

இன்றைய ராசிப்பலன் -  13.06.2017
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும்.
ரிஷபம்
இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது உத்தமம்.
கடகம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன்கள் குறையும்.
விருச்சிகம்
இன்று திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும்.
தனுசு
இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில்  எதிர்பாராத  லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். தேவைகள் யாவும் நிறைவேறும்.