Showing posts with label இன்று - 13.08.2017. Show all posts
Showing posts with label இன்று - 13.08.2017. Show all posts

Sunday, August 13, 2017

இன்று - 13.08.2017

இன்று -  13.08.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






இன்றைய  பஞ்சாங்கம்
13-08-2017, ஆடி- 28, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.32 வரை பின்பு தேய்பிறை சப்தமி. அசுவினி நட்சத்திரம் பின்இரவு 05.04 வரை பின்பு பரணி. சித்தயோகம் பின்இரவு 05.04 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,



சந்தி

சுக்கி
  கேது
திருக்கணித கிரக நிலை
13.08.2017
சூரிய செவ்

புதன்(வ) ராகு

சனி  (வ)

  குரு

இன்றைய ராசிப்பலன் -  13.08.2017
மேஷம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
கடகம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். சேமிப்பு பெருகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.
துலாம்
இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் சுப காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டா-கும்.
தனுசு
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
மகரம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் உண்டாகலாம். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் குறையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
மீனம்

இன்று பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கையிருப்பு குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.