Showing posts with label இன்று - 13.10.2017. Show all posts
Showing posts with label இன்று - 13.10.2017. Show all posts

Friday, October 13, 2017

இன்று - 13.10.2017

இன்று -  13.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
13-10-2017, புரட்டாசி -27, வெள்ளிக்கிழமை, நவமி திதி பின்இரவு 03.22 வரை பின்பு தேய்பிறை தசமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 07.46 வரை பின்பு பூசம். சித்தயோகம் காலை 07.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   







               
திருக்கணித கிரக நிலை
13.10.2017

ராகு சந்தி
கேது
செவ்  


சனி 

குரு
 சூரிய சுக்கி புதன்

இன்றைய ராசிப்பலன் -  13.10.2017
மேஷம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தயாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உடன் பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சுபகாரியம் கைகூடும்.
சிம்மம்
இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கன்னி
இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் -ருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது உத்தமம்.
மகரம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர்பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும். பொன் பொருள் சேரும்.
கும்பம்
இன்று உங்கள் குடும்பத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக சிலருக்கு மனஉளைச்சல் உண்டாகலாம். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.