Showing posts with label இன்று - 14.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 14.01.2017. Show all posts

Saturday, January 14, 2017

இன்று - 14.01.2017

இன்று -  14.01.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
14.01.2017, தை 1, சனிக்கிழமை, துதியை திதி பகல் 12.49 வரை பின்பு தேய்பிறை திரிதியை, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 10.55 வரை பின்பு மகம், மரணயோகம் இரவு 10.55 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, நவகிரக வழிபாடு உத்தமம், பொங்கல் வைக்க காலை 10.30 & 01.00, மாலை 05.00 & 07.00, கரிநாள், உத்தராயண புண்யகாலம் ஆரம்பம்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00






கேது  செவ்
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
-  14.01.2017



சந்தி
சூரிய
ராகு
புதன்

சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  14.01.2017

மேஷம்
இன்று உங்களுக்கு உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகளால் விண் செலவுகள் உண்டாகும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். புதிய பொருள்கள் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
மிதுனம்
இன்று உடன் பிறந்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். திருமண சுபமுயற்சிகளில் சில தடைகளுக்கு பின் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அலைச்சலுக்கேற்ற லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு தீரும்.
கடகம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மனம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும்.
சிம்மம்
இன்று- உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் எதிர்பார்க்காத செலவுகள் தோன்றும். வியாபாரத்தில் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும்.
கன்னி
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
துலாம்
இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்களில் காலதாமதம் ஏற்படும். நண்பர்கள் ஆதரவாய் இருப்பார்கள். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மை அடையலாம்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்கள் அறிவுத் திறமையால் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புக்கள் உருவாகும். பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உறவினர்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். கடன் பிரச்சனைகள் தீரும்.