Showing posts with label இன்று - 14.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 14.04.2017. Show all posts

Friday, April 14, 2017

இன்று - 14.04.2017

இன்று -  14.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

இறைவனிடம் வேண்டுதல் செய்யும் முறை! – சித்தயோகி சிவதாசன் ரவி

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

வார ராசிபலன் (16-04-2017 முதல் 22-04-2017 வரை) சித்திரை 3 முதல் சித்திரை 9 வரை
முனைவர் முருகுபாலமுருகன்

வெளிநாட்டில் உயர்கல்வி யோகம்!-   சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அவிட்டத்தினர் தெவிட்டாத சுகம் பெற! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

யோக அரிட்டங்கள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

 “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்!- சென்ற இதழ் தொடர்ச்சி
முனைவர் முருகுபாலமுருகன்

பிரேத தோஷம் தீர்க்கும் வழிகள்! (வாரம் ஒரு பரிகாரம்)-   விசுஅய்யர்

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்?- -சரவணன் Gendral Sec ICAS

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
14-04-2017, சித்திரை-1, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி மாலை 05.24 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. விசாகம் நட்சத்திரம் பகல் 10.46 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர துர்த்தி விநாயகர் வழிபாடு நல்லது. தமிழ் வருடபிறப்பு.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சுக்கி(வ)

சூரிய
புதன்(வ)
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
14.04.2017



ராகு
சனி(வ)
 சந்தி

               
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  14.04.2017

மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
இன்று குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும்.
கடகம்
இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சனைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனை தீரும்.
சிம்மம்
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களுக்கிடையே மாற்று கருத்துக்கள் தோன்றும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
துலாம்
இன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அரசுத்துறை ஊழியர்களுக்கு  எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். மனஅமைதி உண்டாகும்.
தனுசு
இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
மகரம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களின் திறமைகேற்ப ஊதிய உயர்வுகள் கிட்டும்.
மீனம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சனை தீரும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். வருமானம் பெருகும்.