Showing posts with label இன்று - 14.07.2017. Show all posts
Showing posts with label இன்று - 14.07.2017. Show all posts

Friday, July 14, 2017

இன்று - 14.07.2017

இன்று -  14.07.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
14-07-2017, ஆனி- 30, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.56 வரை பின்பு தேய்பிறைசஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 12.41 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 0. அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   




சுக்கி
சூரிய
கேது சந்தி
திருக்கணித கிரக நிலை
14.07.2017

செவ் புதன்

ராகு

சனி  (வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன் -  14.07.2017

மேஷம்
இன்று குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார விஷயத்தில் கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
சிம்மம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சனை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
கன்னி
இன்று ஆடம்பர பொருள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்ககூடும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.
விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
தனுசு
இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சனைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்தது நிறைவேறும்.
மீனம்

இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் மாற்று கருத்துக்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். அரசுத்துறை ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.