Showing posts with label இன்று - 15.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 15.01.2017. Show all posts

Sunday, January 15, 2017

இன்று - 15.01.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
15.01.2017, தை 2, ஞாயிற்றுகிழமை, திரிதியை திதி பகல் 11.39 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி, மகம் நட்சத்திரம் இரவு 10.43 வரை பின்பு பூரம், மரணயோகம் இரவு 10.43 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, மாட்டு பொங்கல் கோ பூஜை கா 07.00 - 10.00, கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,







கேது  செவ்
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
-  15.01.2017




சூரிய
ராகு சந்தி
புதன்

சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன்  - 15.01.2017

மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அதிக அலைச்சல் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
கடகம்
இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வின் முன்னேற்றத்திற்கான புதிய மாற்றங்கள் உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
துலாம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனைகள் குறையும்.
தனுசு
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படவேண்டும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.
மகரம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
கும்பம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்துடன் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும்.