Showing posts with label இன்று - 15.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 15.02.2017. Show all posts

Wednesday, February 15, 2017

இன்று - 15.02.2017

இன்று -  15.02.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
15.02.2017, மாசி 3, புதன்கிழமைநாள் முழுவதும் தேய்பிறை பஞ்சமி, அஸ்தம் நட்சத்திரம் பகல் 11.32 வரை பின்பு  சித்திரை, மரணயோகம் பகல் 11.32 வரை பின்பு  சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

செவ்
சுக்கி



சூரிய கேது                 
திருக்கணித கிரக நிலை
15.02.2017


புதன்
ராகு
சனி
 

               
குரு  (வ) சந்தி

இன்றைய ராசிப்பலன் -  15.02.2017
மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


ரிஷபம்
இன்று உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவு ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். இதுவரை இருந்த பிரச்சனைகள் இன்று சற்று குறையும். மேலதிகாரிகள் சாதகமாக அமைவார்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று குடும்பத்தினர்க்கிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பர்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும்.
தனுசு
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய சொத்து வாங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
மகரம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும்.
கும்பம்
இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்கள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும். வீட்டில் அமைதி நிலவும்.