Showing posts with label இன்று - 15.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 15.04.2017. Show all posts

Saturday, April 15, 2017

இன்று - 15.04.2017

இன்று -  15.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

இறைவனிடம் வேண்டுதல் செய்யும் முறை! – சித்தயோகி சிவதாசன் ரவி

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

வார ராசிபலன் (16-04-2017 முதல் 22-04-2017 வரை) சித்திரை 3 முதல் சித்திரை 9 வரை
முனைவர் முருகுபாலமுருகன்

வெளிநாட்டில் உயர்கல்வி யோகம்!-   சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அவிட்டத்தினர் தெவிட்டாத சுகம் பெற! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

யோக அரிட்டங்கள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

 “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்!- சென்ற இதழ் தொடர்ச்சி
முனைவர் முருகுபாலமுருகன்

பிரேத தோஷம் தீர்க்கும் வழிகள்! (வாரம் ஒரு பரிகாரம்)-   விசுஅய்யர்

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்?- -சரவணன் Gendral Sec ICAS

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
15-04-2017, சித்திரை-2, சனிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.48 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அனுஷம் நட்சத்திரம் பகல் 01.40 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம் நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

சுக்கி(வ)

சூரிய
புதன்(வ)
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
15.04.2017



ராகு
சனி(வ)
சந்தி 

               
குரு(வ) 

இன்றைய ராசிப்பலன் -  15.04.2017

மேஷம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும்
மிதுனம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு வழி எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனஅமைதி இருக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாய் இருப்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
கன்னி
இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். தெய்வவழிபாடு நன்மையை தரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.
மகரம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சுப செலவுகள் உண்டாகும்.
கும்பம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம்.