Showing posts with label இன்று - 15.06.2017. Show all posts
Showing posts with label இன்று - 15.06.2017. Show all posts

Thursday, June 15, 2017

இன்று - 15.06.2017

இன்று -  15.06.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
15-06-2017, ஆனி- 01, வியாழக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 05.08 வரை பின்பு தேய்பிறைசப்தமி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 05.15 வரை  பின்பு சதயம். சித்தயோகம் மாலை 05.15 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.



சுக்கி
புதன்
சூரிய செவ்
கேது  சந்தி
திருக்கணித கிரக நிலை
15.06.2017


ராகு
சனி(வ)
 

குரு

இன்றைய ராசிப்பலன் -  15.06.2017
மேஷம்
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நட்புடன் இருப்பார்கள். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் சிறு செயல்கள் கூட தாமதமாக முடியக்கூடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன சங்கடங்கள் உண்டாகலாம். உடல் நிலை மந்தமாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும். பொன் பொருள் சேரும்.
கன்னி
இன்று வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பணப்பிரச்சனை குறையும்.
விருச்சிகம்
இன்று பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் உதவி கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு தனவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை தரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
மீனம்

இன்று குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.