Showing posts with label இன்று - 16.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 16.01.2017. Show all posts

Monday, January 16, 2017

இன்று - 16.01.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
16.01.2017, தை 3, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.15 வரை பின்பு பஞ்சமி, பூரம் நட்சத்திரம் இரவு 11.17 வரை பின்பு உத்திரம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, கானும் பொங்கல் கரிநாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.






கேது  செவ்
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
16.01.2017




சூரிய
ராகு சந்தி
புதன்

சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  16.01.2017

மேஷம்
இன்று உங்கள் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாய் இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகளுக்கு வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.
துலாம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. நிதானம் தேவை.  
கும்பம்
இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.