Showing posts with label இன்று - 16.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 16.02.2017. Show all posts

Thursday, February 16, 2017

இன்று - 16.02.2017

இன்று -  16.02.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
16.02.2017, மாசி 4, வியாழக்கிழமை, பஞ்சமி திதி காலை 07.23 வரை பின்பு தேய்பிறை சஷ்டி,                சித்திரை நட்சத்திரம் பகல் 01.41 வரை பின்பு சுவாதி, சித்தயோகம் பகல் 01.41 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 0, சஷ்டி விரதம், முருக வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

செவ்
சுக்கி  



சூரிய கேது
திருக்கணித கிரக நிலை
16.02.2017

புதன்
ராகு
சனி
 

சந்தி  
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  16.02.2017
மேஷம்  
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப ஊதியம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
கடகம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.
கன்னி
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் தடைப்படும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
துலாம்
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும்அலுவலகத்தில் தேவையில்லாத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
தனுசு
இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் வெற்றி பெற்று மன மகிழச்சி ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணவரவு சுமாராக இருக்கும்.
மீனம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். எதிலும் கவனம் தேவை.