Showing posts with label இன்று - 16.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 16.03.2017. Show all posts

Thursday, March 16, 2017

இன்று - 16.03.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
16.03.2017, பங்குனி -3, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பின் இரவு 1.11 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி, சுவாதி நட்சத்திரம் இரவு 12.34 வரை பின்பு விசாகம், அமிர்தயோகம் இரவு 12.34 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2,  ஜீவன் 1, சங்கடஹர சதுர்த்தி விநாயக வழிபாடு உத்தமம், சுபமுகூர்த்த நாள் சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.
சூரிய புதன் சுக்கி(வ)
செவ்


கேது 
திருக்கணித கிரக நிலை
16.03.2017


ராகு
சனி


சந்தி  
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் - 16.03.2017
மேஷம்  
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபளு குறையும். புதிய பொருள் சேரும்.
ரிஷபம்
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று அலுவலகத்தில் தேவையில்லாத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். உடல்நிலை சுறுசுறுப்பாக இருக்கும். சுபசெலவுகள் ஏற்படும்.
கன்னி
இன்று பிள்ளைகளின் உடல்நிலையில் சிறு உபாதைகள் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
துலாம்
இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழிலில் ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வேலையில் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் தடங்கலுக்குப் பின் கைகூடும்.
தனுசு
இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். சுபசெலவுகள் ஏற்படும்.
மகரம்
இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது உத்தமம்.
மீனம்

இன்று உங்களால் குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானமாக செல்ல வேண்டும்.