Showing posts with label இன்று - 16.06.2017. Show all posts
Showing posts with label இன்று - 16.06.2017. Show all posts

Friday, June 16, 2017

இன்று - 16.06.2017

இன்று -  16.06.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
16-06-2017, ஆனி- 02, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 05.15 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. சதயம் நட்சத்திரம் மாலை 06.22 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   



சுக்கி
புதன்
சூரிய செவ்
சந்தி
கேது 
திருக்கணித கிரக நிலை
16.06.2017



ராகு
சனி(வ)
 

குரு

இன்றைய ராசிப்பலன் -  16.06.2017
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
ரிஷபம்
இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளின் உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.
கடகம்
இன்று உங்களால் குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானத்துடன் செல்ல வேண்டும்.
சிம்மம்
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும்.
கன்னி
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படக்கூடும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
விருச்சிகம்
இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். தெய்வ வழிபாடு நல்லது.
தனுசு
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உத்தியோக ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.
மகரம்
இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபளு குறையும். புதிய பொருள் சேரும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
கும்பம்
இன்று உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.
மீனம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் விலகி லாபம் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.