Showing posts with label இன்று - 16.08.2017. Show all posts
Showing posts with label இன்று - 16.08.2017. Show all posts

Wednesday, August 16, 2017

இன்று - 16.08.2017

இன்று -  16.08.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com







இன்றைய  பஞ்சாங்கம்
16-08-2017, ஆடி- 31, புதன்கிழமை, நவமி திதி பகல் 03.18 வரை பின்பு தேய்பிறை தசமி. ரோகிணி நட்சத்திரம் இரவு 12.50 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00




சந்தி
சுக்கி
  கேது
திருக்கணித கிரக நிலை
16.08.2017
சூரிய செவ்

புதன்(வ) ராகு

சனி  (வ)

  குரு

இன்றைய ராசிப்பலன் -  16.08.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும்.
மிதுனம்
இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
கடகம்
இன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும்.
துலாம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் நல்லது.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
தனுசு
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் வெற்றி பெற்று மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.
மகரம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். கணவன்& மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணி சுமை குறையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு அக்கம் பக்கத்தினரால் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மனஅமைதி உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.