Showing posts with label இன்று - 18.08.2017. Show all posts
Showing posts with label இன்று - 18.08.2017. Show all posts

Friday, August 18, 2017

இன்று - 18.08.2017

இன்று -  18.08.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






இன்றைய  பஞ்சாங்கம்
18-08-2017, ஆவணி- 02, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி பகல் 10.01 வரை பின்பு தேய்பிறை துவாதசி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 09.03 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   




சந்தி சுக்கி
               
திருக்கணித கிரக நிலை
18.08.2017
ராகு செவ்
கேது
சூரிய புதன்(வ)

சனி  (வ)

  குரு

இன்றைய ராசிப்பலன் -  18.08.2017
மேஷம்
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.
மிதுனம்
இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.
கடகம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
துலாம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
தனுசு
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மறைமுக பகை நீங்கும். வருமானம் பெருகும்.
மகரம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்கான வங்கி கடன் கிடைக்கப்பெறும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மீனம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.