Showing posts with label இன்று - 19.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 19.01.2017. Show all posts

Thursday, January 19, 2017

இன்று - 19.01.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
19.01.2017, தை 6, வியாழக்கிழமை, சப்தமி திதி      பகல் 02.37 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி, சித்திரை நட்சத்திரம் பின்இரவு 05.10 வரை பின்பு சுவாதி, சித்தயோகம் பின் இரவு 05.10 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள், கால பைரவர் வழிபாடு நல்லது.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.






கேது  செவ்
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
19.01.2017



சூரிய
ராகு
புதன்

சனி 

               
குரு  சந்தி


இன்றைய ராசிப்பலன் -  19.01.2017

மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். அலுவலகத்தில் வேலைபளு கூடும். குடும்பத்தில் உள்ளவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இதுவரை இருந்த பிரச்சனைகள் இன்று சற்று குறையும்.
கடகம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
கன்னி
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.
விருச்சிகம்
இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும்.
கும்பம்
நீங்கள் மனஉளைச்சலோடு காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு மதியம் 03.51 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் கவனமுடன் பேசுவதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மீனம்

இன்று உங்களுக்கு மன குழப்பம் இருக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.