Showing posts with label இன்று - 19.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 19.03.2017. Show all posts

Sunday, March 19, 2017

இன்று - 19.03.2017

இன்று -  19.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


செல்வம்செல்வாக்கு யார் மூலம் கிடைக்கும்?
-     &முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்    &முனைவர் முருகு பாலமுருகன்

வார ராசிபலன் 19&3&2017 முதல் 25&3&2017 வரை
                              &முனைவர் முருகு பாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!
&டாக்டர் இராரகு M,Sc Astro

நூறாண்டு வாழும் யோகம்!  குமார சுவாமியம் கூறும் பன்னிருபாவப் பலன்கள்!                          &பிராஜசேகரன் M.Phil Astro

நலம் பெருக்கும் நாளும் செயலும்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

மூலத்தில் பிறந்தோர் முன்னேறும் நெறிகள்நட்சத்திரப்பரிகாரங்கள்!
&ஜோதிஷண்முகம்

கடன் சுமை அகற்றும் சதுரங்க பந்தம்!
&விசு அய்யர்

அண்ணனை பகைக்கும் தம்பிகள் யார்?
&சரவணன் Gendral Sec ICAS

உலக அழகிக்கும் தாமதத் திருமணம் ஏன்?
&ஜோதிடச்சுடர் ஞானரதம் M.A.Astro. M,Phil
உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி!
&முனைவர் முருகு பாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
19.03.2017, பங்குனி -6, ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சப்தமி திதி, நாள் முழுவதும் கேட்டை நட்சத்திரம், நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, கரிநாள், புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

சூரிய புதன்
சுக்கி(வ)
செவ்


கேது  
திருக்கணித கிரக நிலை
19.03.2017



ராகு
சனி
  சந்தி

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் - 19.03.2017
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். செய்யும் செயல்களில் தாமத பலனே கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் பொழுது நிதானத்தை கடை பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
ரிஷபம்
இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
மிதுனம்
இன்று இல்லத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். சுப செலவுகள் உண்டாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சனைகள் வரலாம். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
கன்னி
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பொன் பொருள் சேரும்.
துலாம்
இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராக இருக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.
தனுசு
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் சற்று குறையும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பெரியோர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் செய்ய நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின்     ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கும்பம்
இன்று புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மீனம்

இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு கரையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் விலகும்.