Showing posts with label இன்று - 19.09.2017. Show all posts
Showing posts with label இன்று - 19.09.2017. Show all posts

Tuesday, September 19, 2017

இன்று - 19.09.2017

இன்று -  19.09.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
19-09-2017, புரட்டாசி -03, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தசி திதி பகல் 11.52 வரை பின்பு அமாவாசை. பூரம் நட்சத்திரம் இரவு 11.00 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் இரவு 12.05 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 0. சர்வ மஹாளய அமாவாசை.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.






               
திருக்கணித கிரக நிலை
19.09.2017


ராகு
கேது
சந்தி செவ் சுக்கி புதன்

சனி
குரு
சூரிய

இன்றைய ராசிப்பலன் -  19.09.2017
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் ஓரளவு குறையும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். வருமானம் பெருகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.
கன்னி
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். அலுவலகத்தில் வேலைபளு கூடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.
துலாம்
இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வங்கி சேமிப்பு உயரும்.
தனுசு
இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.
கும்பம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.
மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.