Showing posts with label இன்று - 20.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 20.01.2017. Show all posts

Friday, January 20, 2017

இன்று - 20.01.2017



கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
20.01.2017, தை 7, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.54 வரை பின்பு தேய்பிறை நவமிநாள் முழுவதும் சுவாதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, அம்மன் வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00






கேது  செவ்
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
20.01.2017




சூரிய
ராகு
புதன்

சனி 

                சந்தி
குரு 

இன்றைய ராசிப்பலன் -  20.01.2017

மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் தீரும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நல்ல பலன்களை தரும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
கடகம்
இன்று வேலையில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.
கன்னி
இன்று சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். பிள்ளைகளால் நல்லது நடக்கும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வியாபார முன்னேற்றத்திற்காக சிறு தொகை கடன் வாங்க நேரிடும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். திருமண சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தனுசு
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சனைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சேமிப்பு குறையும்.
மீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் பொழுது நிதானத்கை கடைபிடிக்க வேண்டும்.