Showing posts with label இன்று - 20.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 20.02.2017. Show all posts

Monday, February 20, 2017

இன்று - 20.02.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
20.02.2017, மாசி 8, திங்கட்கிழமை, நவமி திதி மாலை 04.41 வரை பின்பு தேய்பிறை தசமி,   கேட்டை நட்சத்திரம் பின்இரவு 12.52 வரை பின்பு மூலம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன்  1/2, சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

செவ்
சுக்கி



சூரிய
கேது 
திருக்கணித கிரக நிலை
20.02.2017



புதன்
ராகு
சனி
 
சந்தி
               
குரு 
(வ)

இன்றைய ராசிப்பலன் -  20.02.2017

மேஷம்  
இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், கவலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளை விற்பதில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
கடகம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்-றும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.
கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும்.
துலாம்
இன்று நீங்கள் குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்கலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்புதிய பொருள் வீடு வந்து சேரும்.
தனுசு
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.
மகரம்
குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். வீட்டில் சுப பேச்சுக்கள் நல்ல பலனை தரும். சேமிப்பு உயரும்.
கும்பம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவை பூர்த்தியாகும்.
மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள்.