Showing posts with label இன்று - 20.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 20.04.2017. Show all posts

Thursday, April 20, 2017

இன்று - 20.04.2017

இன்று -  20.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

தங்கம் வாங்க நல்ல தருணம்!-              முனைவர் முருகுபாலமுருகன்

வெற்றி தரும் நட்சத்திரக் குறியீடுகள்! –    சித்தயோகி சிவதாசன் ரவி

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

சதயத்தினர் சகலமும் பெற வழிகள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!                                                          ஜோதிஷண்முகம்

சுயதொழில், அடிமைத்தொழில் யாருக்கு?-  -சரவணன் Gendral Sec ICAS

சொந்த வீட்டுக் கனவை நிஜமாக்கும் பரிகாரம்! (வாரம் ஒரு பரிகாரம்)-                                                                 விசுஅய்யர்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

500 ஆண்டு ஆயுள் யாருக்கு! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!                                     -பி.ராஜசேகரன் M.Phil Astro

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

வெற்றி சூத்திரம்!-    சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

வார ராசிபலன் (23-04-2017 முதல் 29-04-2017 வரை) சித்திரை 10 முதல் 16 வரை

முனைவர் முருகுபாலமுருகன்

இன்றைய  பஞ்சாங்கம்
20-04-2017, சித்திரை-7, வியாழக்கிழமை, நவமி திதி பின்இரவு 04.55 வரை பின்பு தேய்பிறை தசமி. திருவோணம் நட்சத்திரம் இரவு 01.51 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம் நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஹயக்ரீவருக்கு வழிபாடு நல்லது. நடராஜர் அபிஷேகம். சுப முயற்சிகளையும். பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சுக்கி

சூரிய
புதன்(வ)
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
20.04.2017


சந்தி
ராகு
சனி(வ)
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் - 20.04.2017

மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். பணபற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
சிம்மம்
இன்று பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி வருமானம் பெருகும்.
துலாம்
இன்று வேலையில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சனைகள் தோன்றும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
மகரம்
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கடன் பிரச்சனைகள் தீரும்.
கும்பம்
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நல்ல பலன்களை தரும். உத்தியோகத்தில் புதிய நட்பு உண்டாகும். எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கப்பெறும்.
மீனம்

இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். சேமிப்பு உயரும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.