Showing posts with label இன்று - 21.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 21.03.2017. Show all posts

Tuesday, March 21, 2017

இன்று - 21.03.2017

இன்று -  21.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

                                          வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

நலம் சேர்க்கும் குரு பார்வை!-  -முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்!--முனைவர் முருகு பாலமுருகன்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்!-  -. சரவணன் Gendral Sec ICAS

திருமணத்தை உறுதியாக்கும் பங்குனி உத்திர கல்யாண விரதம்! (வாரம் ஒரு பரிகாரம்)-            -விசு அய்யர்

காகம் சொல்லும் சகுணம்!- பிரசன்ன ஜோதிட வித்தகர் அம்சி விவேகானந்தன்

பிரம்மச்சரியத்தால் சாதனை படைக்கலாம்!
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

நலம் பெருக்கும் நாளும் செயலும்!
-மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

புராடத்தினரின் புகழ் பெருக்கும் பரிகாரம்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
-ஜோதிஷண்முகம்

ஐந்து வகை ஆயுள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                              -பி. ராஜசேகரன் M.Phil Astro

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!---டாக்டர் இரா. ரகு M,Sc Astro


குறியீடுகளின் தத்துவம்!-        சித்தயோகி சிவதாசன் ரவி

வார ராசிபலன் (26-3-2017 முதல் 01-04-2017 வரை) பங்குனி 13 முதல் 19 வரை

                                    முனைவர் முருகு பாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
21.03.2017, பங்குனி - 8, செவ்வாய்கிழமை, அஷ்டமி திதி காலை 10.32 வரை பின்பு தேய்பிறை நவமி, மூலம் நட்சத்திரம் பகல் 11.51 வரை பின்பு பூராடம், அமிர்தயோகம் பகல் 11.51 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, முருக வழிபாடு உத்தமம், புதிய முயற்சிச்களையும், பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சூரிய புதன்
சுக்கி(வ)
செவ்


கேது 
திருக்கணித கிரக நிலை
21.03.2017



ராகு
சந்தி சனி

 

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் - 21.03.2017
மேஷம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். திருமண சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மிதுனம்
இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.
சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சில தடைக்கும் பின்பு அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.
கன்னி
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் குறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
துலாம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
தனுசு
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை குறையும்.
மகரம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்
இன்று மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சயை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.
மீனம்


இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனை தீரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும்.