Showing posts with label இன்று - 21.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 21.04.2017. Show all posts

Friday, April 21, 2017

இன்று - 21.04.2017

இன்று -  21.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

தங்கம் வாங்க நல்ல தருணம்!-              முனைவர் முருகுபாலமுருகன்

வெற்றி தரும் நட்சத்திரக் குறியீடுகள்! –    சித்தயோகி சிவதாசன் ரவி

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

சதயத்தினர் சகலமும் பெற வழிகள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!                                                          ஜோதிஷண்முகம்

சுயதொழில், அடிமைத்தொழில் யாருக்கு?-  -சரவணன் Gendral Sec ICAS

சொந்த வீட்டுக் கனவை நிஜமாக்கும் பரிகாரம்! (வாரம் ஒரு பரிகாரம்)-                                                                 விசுஅய்யர்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

500 ஆண்டு ஆயுள் யாருக்கு! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!                                     -பி.ராஜசேகரன் M.Phil Astro

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

வெற்றி சூத்திரம்!-    சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

வார ராசிபலன் (23-04-2017 முதல் 29-04-2017 வரை) சித்திரை 10 முதல் 16 வரை

முனைவர் முருகுபாலமுருகன்

இன்றைய  பஞ்சாங்கம்
21-04-2017, சித்திரை-8, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 04.55 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. அவிட்டம் நட்சத்திரம் பின் இரவு 02.36 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சுக்கி

சூரிய
புதன்(வ)
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
21.04.2017


சந்தி
ராகு
சனி(வ)
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  21.04.2017

மேஷம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு மதியம் 02.20 மணிக்கு வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண்வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மதியத்திற்கு பின் மனஅமைதி இருக்கும்.
கடகம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு மதியம் 02.20 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்க்கவும்.
சிம்மம்
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும்.
துலாம்
இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சனைகள் குறையும்.
விருச்சிகம்
இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.
மகரம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி சேமிப்பு உயரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.
மீனம்

இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். அலுவலகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். புதிய நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.