Showing posts with label இன்று - 21.08.2017. Show all posts
Showing posts with label இன்று - 21.08.2017. Show all posts

Monday, August 21, 2017

இன்று - 21.08.2017

இன்று -  21.08.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com








இன்றைய  பஞ்சாங்கம்
21-08-2017, ஆவணி- 05, திங்கட்கிழமை, அமாவாசை திதி இரவு 12.00 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 03.51 வரை பின்பு மகம். சித்தயோகம் பகல் 03.51 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 0. சர்வ அமாவாசை. சூரிய கிரகணம்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.




சுக்கி  


               
திருக்கணித கிரக நிலை
21.08.2017

சந்தி செவ் ராகு
கேது 
சூரிய புதன்(வ)

சனி  (வ)
               
குரு

இன்றைய ராசிப்பலன் -  21.08.2017
மேஷம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
ரிஷபம்
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை ஏற்படும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.
சிம்மம்
இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் இனிய செய்திகள் வந்து சேரும்.
கன்னி
இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் திருமண கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
துலாம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
தனுசு
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களினால் அலைச்சல் கோபம் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 03.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 03.51 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கும்பம்
இன்று மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். மனநிம்மதி இருக்கும்.
மீனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.