Showing posts with label இன்று - 22.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 22.01.2017. Show all posts

Sunday, January 22, 2017

இன்று - 22.01.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
22.01.2017, தை 9, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி இரவு 10.00 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி, விசாகம் நட்சத்திரம் பகல் 11.03 வரை பின்பு அனுஷம், நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,


செவ்




கேது 
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
22.01.2017



சூரிய
ராகு
புதன்

சனி  சந்தி

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  22.01.2017

மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
கடகம்
இன்று நீங்கள் குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் வீண் மனஸ்தாபங்களை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மதிப்பு கிடைக்கும். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.
சிம்மம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.
கன்னி
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.
விருச்சிகம்
இன்று உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நல்ல பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளை விற்பதில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவை பூர்த்தியாகும்.
கும்பம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் படிப்பிற்கான கல்வி கடன் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.
மீனம்

இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபார சம்பந்தமாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும்.