Showing posts with label இன்று - 22.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 22.03.2017. Show all posts

Wednesday, March 22, 2017

இன்று - 22.03.2017

இன்று -  22.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

நலம் சேர்க்கும் குரு பார்வை!-  -முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்!--முனைவர் முருகு பாலமுருகன்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்!-  -சரவணன் Gendral Sec ICAS

திருமணத்தை உறுதியாக்கும் பங்குனி உத்திர கல்யாண விரதம்! (வாரம் ஒரு பரிகாரம்)-            -விசு அய்யர்

காகம் சொல்லும் சகுணம்!- பிரசன்ன ஜோதிட வித்தகர் அம்சி விவேகானந்தன்

பிரம்மச்சரியத்தால் சாதனை படைக்கலாம்!
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

நலம் பெருக்கும் நாளும் செயலும்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

புராடத்தினரின் புகழ் பெருக்கும் பரிகாரம்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
-ஜோதிஷண்முகம்

ஐந்து வகை ஆயுள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                              -பிராஜசேகரன் M.Phil Astro

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro


குறியீடுகளின் தத்துவம்!-        சித்தயோகி சிவதாசன் ரவி

வார ராசிபலன் (26-3-2017 முதல் 01-04-2017 வரை) பங்குனி 13 முதல் 19 வரை

                                    முனைவர் முருகுபாலமுருகன்

இன்றைய  பஞ்சாங்கம்
22.03.2017, பங்குனி - 9, புதன்கிழமை, நவமி திதி பகல் 12.18 வரை பின்பு தேய்பிறை தசமி, பூராடம் நட்சத்திரம் பகல் 02.07 வரை பின்பு உத்திராடம், நாள் முழுவதும் அமிர்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சூரிய புதன்
சுக்கி(வ)
செவ்


கேது 
திருக்கணித கிரக நிலை
22.03.2017




ராகு
சந்தி சனி
 

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  22.03.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். உத்தியோகத்தில் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.
ரிஷபம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வண்டியில் செல்லும்போது நிதானம் தேவை.
மிதுனம்
இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கடகம்
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
துலாம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் தோன்றும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
தனுசு
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். பொருளாதார நிலை மிகசிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும்.
மகரம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோரின் ஆறுதலான வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.
கும்பம்
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.
மீனம்

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.