Showing posts with label இன்று - 22.07.2017. Show all posts
Showing posts with label இன்று - 22.07.2017. Show all posts

Saturday, July 22, 2017

இன்று - 22.07.2017

இன்று -  22.07.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
22-07-2017, ஆடி- 06, சனிக்கிழமை, சதுர்த்தசி திதி மாலை 06.28 வரை பின்பு அமாவாசை. திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.19 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 1/2. போதாயண ஆடி அமாவாசை.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.



சுக்கி
சந்தி
கேது 
               
திருக்கணித கிரக நிலை
22.07.2017

சூரிய செவ்

புதன் ராகு


சனி  (வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன் -22.07.2017
மேஷம்
இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெரும் வாய்ப்புகள் ஏற்படும். சேமிப்பு உயரும்.
மிதுனம்
இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் சக நண்பர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
கடகம்
இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வேலையில் பணிச்சுமை குறையும்.
துலாம்
இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.
தனுசு
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிர்பார்த்த லாபம் கிட்டும். வெளியூரிலிருந்து வேலை கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய பொருள் சேரும்.
மகரம்
இன்று எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சனைகள் விலகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.
கும்பம்
இன்று குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். கடன் பிரச்சனை குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்
மீனம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலன் கிட்டும்.