Showing posts with label இன்று - 22.09.2017. Show all posts
Showing posts with label இன்று - 22.09.2017. Show all posts

Friday, September 22, 2017

இன்று - 22.09.2017

இன்று -  22.09.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
22-09-2017, புரட்டாசி -06, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 10.42 வரை பின்பு திரிதியை. சித்திரை நட்சத்திரம் இரவு 12.37 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   






               
திருக்கணித கிரக நிலை
22.09.2017


ராகு
கேது
செவ் சுக்கி புதன்

சனி
குரு
சூரிய சந்தி

இன்றைய ராசிப்பலன் -  22.09.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் பிரச்சனைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
கடகம்
இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் மந்த நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.
கன்னி
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நல்ல பலன்களை தரும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடையலாம். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு கூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு மதியம் 12.01 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.
மீனம்

இன்று உங்கள் ராசிக்கு மதியம் 12.01 க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.