Showing posts with label இன்று - 23.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 23.01.2017. Show all posts

Monday, January 23, 2017

இன்று - 23.01.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
23.01.2017, தை 10, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 12.22 வரை பின்பு தேய்பிறை துவாதசி, அனுஷம் நட்சத்திரம் பகல் 01.56 வரை பின்பு  கேட்டை, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.


செவ்




கேது 
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
23.01.2017



சூரிய
ராகு
புதன்

சனி 
சந்தி
               
குரு 

இன்றைய ராசிப்பலன் -  23.01.2017

மேஷம்
இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.
ரிஷபம்
இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சக நண்பர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
கடகம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறையும். வேலையில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.
சிம்மம்
இன்று நீங்கள் பிறர்க்கு உதவிகள் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும்.
துலாம்
இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு வேலையை செய்வதற்கு கூட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு வியாபாரத்தில் லாபத்தை அடையலாம். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
விருச்சிகம்
இன்று தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வெளியூரிலிருந்து வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும்.
தனுசு
இன்று எதிர்பாராத செலவுகளால் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இடையூறுகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.
மகரம்
இன்று வீட்டில் மங்களஎ நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வருமானம் பெருகும்.
கும்பம்
இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சேமிப்பு உயரும்.
மீனம்
இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் மனசங்கடங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.