Showing posts with label இன்று - 23.02.2017. Show all posts
Showing posts with label இன்று - 23.02.2017. Show all posts

Thursday, February 23, 2017

இன்று - 23.02.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
23.02.2017, மாசி 11, வியாழக்கிழமை, துவாதசி திதி இரவு 09.18 வரை பின்பு தேய்பிறை திரியோதசி, உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 06.29 வரை பின்பு உத்திராடம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

செவ்
சுக்கி



சூரிய கேது 
புதன் 
               
திருக்கணித கிரக நிலை
23.02.2017



ராகு
சந்தி சனி

 

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் - 23.02.2017

மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன்களும் கிட்டும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். கடன் சுமை குறையும்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.34 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன குழப்பங்கள் ஏற்படும்புதிய முயற்சிகளை தொடங்காமல் இருப்பதும், கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையினை ஈடுபடுத்தாமல் இருப்பதும் உத்தமம். எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்பட வேண்டும்
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.34 மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது.
கடகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண சுபமுயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு உறவினர்களுக்கிடையே வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு
இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக தொழிலாளர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் குறையும். பணவரவு சுமாராக இருக்கும்.
மகரம்
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். சேமிப்பு குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணபற்றாக்குறை நீங்கும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் குறையும்.
மீனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பணவரவு அமோகமாக இருக்கும்.