Showing posts with label இன்று - 23.05.2017. Show all posts
Showing posts with label இன்று - 23.05.2017. Show all posts

Tuesday, May 23, 2017

இன்று - 23.05.2017

இன்று -  23.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


செல்வம் கொழிக்கச் செய்யும் தெய்வீக மூலிகைகள்!-  கடகம் இராமசாமி

வார ராசிபலன் (28-05-2017 முதல் 03-06-2017 வரை) வைகாசி 14 முதல் 20 வரை
முனைவர் முருகு பாலமுருகன்

தங்கம் பெருக தங்கமான தருணம்! -      அம்சி விவேகானந்தன்

தீய குணங்களை மாற்றும் தேய்பிறை அஷ்டமி யாகம்!-
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகு பாலமுருகன்

வெளிநாட்டு திட்டம் கைகூட வேண்டுமா? – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசு அய்யர்

சுவையாக உணவுண்ணும் யோகம்! -       பி. ராஜசேகரன் M.Phil Astro

100 சதவிகித வெற்றி தரும் ஹோரை பலம்! -
மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

விஷக் கன்னியர் பிறக்கும் கார்த்திகை!-- -        -டாக்டர் இரா. ரகு M,Sc Astro

அரசியலில் வெற்றி தரும் சின்னங்கள்! –   சித்தயோகி சிவதாசன் ரவி

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்





இன்றைய  பஞ்சாங்கம்
23-05-2017, வைகாசி -9, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பகல் 12.03 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. ரேவதி நட்சத்திரம் காலை 08.24 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0, ஜீவன் - 1/2. பிரதோஷம். சிவ - முருக வழிபாடு நல்லது. தனிய நாள் சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சுக்கி  
சந்தி
புதன்

சூரிய செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
23.05.2017




ராகு
சனி(வ)
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  23.05.2017

மேஷம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். உடல் நிலை சீராகும்.
கடகம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். திருமண சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
சிம்மம்
இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.
துலாம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களது திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கடன் சுமை குறையும். உடல்நிலை சீராகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
மகரம்
இன்று உறவினர்களுக்கிடையே வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் தீரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாய் அமைவார்கள். அத்தியாவச தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.
மீனம்

இன்று பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.