Showing posts with label இன்று - 23.07.2017. Show all posts
Showing posts with label இன்று - 23.07.2017. Show all posts

Sunday, July 23, 2017

இன்று - 23.07.2017

இன்று -  23.07.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
23-07-2017, ஆடி- 07, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை திதி பகல் 03.15 வரை பின்பு வளர்பிறை பிரதமை. புனர்பூசம் நட்சத்திரம் காலை 09.53 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 0. சர்வ ஆடி அமாவாசை. அம்மன் வழிபாடு நல்லது. தனிய நாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,




சுக்கி

கேது 
               
திருக்கணித கிரக நிலை
23.07.2017


சூரிய சந்தி செவ்

புதன்
ராகு

சனி  (வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன் -23.07.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள. சுபகாரியங்கள் கைகூடும்.
ரிஷபம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த கடன் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.
கடகம்
இன்று பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்கள் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்ககூடும். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
கன்னி
இன்று உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நல்ல பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்வருமானம் இரட்டிப்பாகும். கடன்கள் குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
துலாம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் பாதிப்புகள் குறையும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
மகரம்
இன்று இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்
மீனம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.