Showing posts with label இன்று - 24.01.2017. Show all posts
Showing posts with label இன்று - 24.01.2017. Show all posts

Tuesday, January 24, 2017

இன்று - 24.01.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
24.01.2017, தை 11, செவ்வாய்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.23 வரை பின்பு தேய்பிறை திரியோதசி, கேட்டை நட்சத்திரம் மாலை 04.33 வரை பின்பு மூலம், மரணயோகம் மாலை 04.33 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, முருக வழிபாடு நல்லது, கரிநாள் சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.


செவ்



கேது 
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
24.01.2017


சூரிய
ராகு
புதன்

சனி  சந்தி

               
குரு 


இன்றைய ராசிப்பலன் &  24.01.2017

மேஷம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பம் கவலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மாலை 4.33 மணி வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் வேண்டும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
மிதுனம்
இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் கல்வி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும்.
கடகம்
இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
சிம்மம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும்.
தனுசு
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
மகரம்
இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். பிள்ளைகளின் மேற்படிப்பிற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும்.
மீனம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பெற்றோரின் ஆறுதலான வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.