Showing posts with label இன்று - 24.05.2017. Show all posts
Showing posts with label இன்று - 24.05.2017. Show all posts

Wednesday, May 24, 2017

இன்று - 24.05.2017

இன்று -  24.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


செல்வம் கொழிக்கச் செய்யும் தெய்வீக மூலிகைகள்!-  கடகம் இராமசாமி

வார ராசிபலன் (28-05-2017 முதல் 03-06-2017 வரை) வைகாசி 14 முதல் 20 வரை
முனைவர் முருகு பாலமுருகன்

தங்கம் பெருக தங்கமான தருணம்! -      அம்சி விவேகானந்தன்

தீய குணங்களை மாற்றும் தேய்பிறை அஷ்டமி யாகம்!-
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகு பாலமுருகன்

வெளிநாட்டு திட்டம் கைகூட வேண்டுமா? – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசு அய்யர்

சுவையாக உணவுண்ணும் யோகம்! -       பிராஜசேகரன் M.Phil Astro

100 சதவிகித வெற்றி தரும் ஹோரை பலம்! -
மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

விஷக் கன்னியர் பிறக்கும் கார்த்திகை!-- -        -டாக்டர் இராரகு M,Sc Astro

அரசியலில் வெற்றி தரும் சின்னங்கள்! –   சித்தயோகி சிவதாசன் ரவி

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
24-05-2017, வைகாசி -10, புதன் கிழமை, திரியோதசி திதி காலை 08.48 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 05.08 வரை பின்பு அமாவாசை. அஸ்வினி நட்சத்திரம் காலை 06.02 வரை பின்பு பரணி நட்சத்திரம் பின்இரவு 03.14 வரை பின்பு கிருத்திகை. மரணயோகம் காலை 06.02 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 03.14 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0, ஜீவன் - 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00


சுக்கி
புதன்
சந்தி
சூரிய
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
24.05.2017



ராகு
சனி(வ)
 

               
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  24.05.2017

மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகள் குறையும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அனுகூலப்பலன் கிடைக்ககூடும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
துலாம்
இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல் படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன்கள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பணப்பற்றாக்குறை தீரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும்.
மீனம்

இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.