Showing posts with label இன்று - 25.03.2017. Show all posts
Showing posts with label இன்று - 25.03.2017. Show all posts

Saturday, March 25, 2017

இன்று - 25.03.2017

இன்று -  25.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

நலம் சேர்க்கும் குரு பார்வை!-  -முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்!--முனைவர் முருகு பாலமுருகன்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்!-  -சரவணன் Gendral Sec ICAS

திருமணத்தை உறுதியாக்கும் பங்குனி உத்திர கல்யாண விரதம்! (வாரம் ஒரு பரிகாரம்)-            -விசு அய்யர்

காகம் சொல்லும் சகுணம்!- பிரசன்ன ஜோதிட வித்தகர் அம்சி விவேகானந்தன்

பிரம்மச்சரியத்தால் சாதனை படைக்கலாம்!
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

நலம் பெருக்கும் நாளும் செயலும்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

புராடத்தினரின் புகழ் பெருக்கும் பரிகாரம்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
-ஜோதிஷண்முகம்

ஐந்து வகை ஆயுள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                              -பிராஜசேகரன் M.Phil Astro

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro


குறியீடுகளின் தத்துவம்!-        சித்தயோகி சிவதாசன் ரவி

வார ராசிபலன் (26-3-2017 முதல் 01-04-2017 வரை) பங்குனி 13 முதல் 19 வரை

                                    முனைவர் முருகுபாலமுருகன்

இன்றைய  பஞ்சாங்கம்
25.03.2017, பங்குனி - 12, சனிக்கிழமை,   துவாதசி திதி பகல் 01.34 வரை பின்பு தேய்பிறை திரியோதசி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.58 வரை பின்பு சதயம், சித்தயோகம் மாலை 04.58 வரை பின்பு அமிர்தயோகம்,       நேத்திரம் 0, ஜீவன் 1/2, சனி பிரதோஷம் சிவ வழிபாடு உத்தமம்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

சூரிய புதன்
சுக்கி(வ)
செவ்


கேது  சந்தி  
திருக்கணித கிரக நிலை
25.03.2017



ராகு
சனி 

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  25.03.2017
மேஷம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கடன் வாங்குவதோ கொடுப்பதோ தவிர்ப்பது உத்தமம். வாகனத்தில் பயணம் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.
சிம்மம்
இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கடன்பிரச்சனை ஓரளவு தீரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களால் வீண் பிரச்சனைகள் தோன்றும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சனைகள் தீரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
தனுசு
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடையலாம். சேமிப்பு உயரும். வருமானம் இரட்டிப்பாகும்.
மகரம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகும். குடும்பத்தினருக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். கடன் பிரச்சனைகள் குறையும்.
கும்பம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். கடன்சுமை தீரும்.
மீனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.