Showing posts with label இன்று - 25.04.2017. Show all posts
Showing posts with label இன்று - 25.04.2017. Show all posts

Tuesday, April 25, 2017

இன்று - 25.04.2017

இன்று -  25.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


உச்சிக்கு கொண்டு செல்லும் உயர்கல்வி யோகம்!-                                                                    முனைவர் முருகு பாலமுருகன்

டி.என்.ஏ. நுட்பத்தில் ராகு-கேது! -           ஜோதிடர் கே.பி. ஐயப்ப சர்மா

வார ராசிபலன் (30-04-2017 முதல் 06-05-2017 வரை) சித்திரை 17 முதல் 23 வரை
முனைவர் முருகு பாலமுருகன்

சாதனையாளர் ஜாதகம்!-              சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அளவற்ற செல்வம் தரும் சாம்ராஜ்ய யோகம்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!                              -பிராஜசேகரன் M.Phil Astro

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

தடைகளைத் தகர்க்கும் பரிகாரங்கள்! (வாரம் ஒரு பரிகாரம்)-      விசு அய்யர்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

பூரட்டாதியினருக்கு ஏற்றங்கள் பெருக! நட்சத்திரப் பரிகாரங்கள்!                                                       ஜோதிஷண்முகம்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

சுயதொழில், அடிமைத்தொழில் யாருக்கு?-  -சரவணன் Gendral Sec ICAS

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்




தீராத நோய் தீர்க்கும் சர்ப்பக் குறியீடு! –    சித்தயோகி சிவதாசன் ரவி




இன்றைய  பஞ்சாங்கம்
25-04-2017, சித்திரை-12, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தசி திதி இரவு 09.08 வரை பின்பு அமாவாசை. ரேவதி நட்சத்திரம் இரவு 09.55 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. போதாயண அமாவாசை. முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சந்தி
சுக்கி
சூரிய
புதன்(வ)
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
25.04.2017




ராகு
சனி(வ)
 

               
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  25.04.2017

மேஷம்
இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாககூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது மூலம் லாபம் அடையலாம். வேலையில் சக தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
ரிஷபம்
இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும்.
கடகம்
இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாக கூடும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
கன்னி
இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.
துலாம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். குடும்பத்தினருக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் ஓரளவு தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
தனுசு
இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
கும்பம்
இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
மீனம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.