Showing posts with label இன்று - 25.05.2017. Show all posts
Showing posts with label இன்று - 25.05.2017. Show all posts

Thursday, May 25, 2017

இன்று - 25.05.2017

இன்று -  25.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


செல்வம் கொழிக்கச் செய்யும் தெய்வீக மூலிகைகள்!-  கடகம் இராமசாமி

வார ராசிபலன் (28-05-2017 முதல் 03-06-2017 வரை) வைகாசி 14 முதல் 20 வரை
முனைவர் முருகு பாலமுருகன்

தங்கம் பெருக தங்கமான தருணம்! -      அம்சி விவேகானந்தன்

தீய குணங்களை மாற்றும் தேய்பிறை அஷ்டமி யாகம்!-
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகு பாலமுருகன்

வெளிநாட்டு திட்டம் கைகூட வேண்டுமா? – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசு அய்யர்

சுவையாக உணவுண்ணும் யோகம்! -       பிராஜசேகரன் M.Phil Astro

100 சதவிகித வெற்றி தரும் ஹோரை பலம்! -
மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

விஷக் கன்னியர் பிறக்கும் கார்த்திகை!-- -        -டாக்டர் இராரகு M,Sc Astro

அரசியலில் வெற்றி தரும் சின்னங்கள்! –   சித்தயோகி சிவதாசன் ரவி

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்




இன்றைய  பஞ்சாங்கம்
25-05-2017, வைகாசி -11, வியாழக்கிழமை, அமாவாசை திதி பின் இரவு 01.14 வரை பின்பு வளர்பிறை பிரதமை. கிருத்திகை நட்சத்திரம் இரவு 12.10 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0, ஜீவன் - 0. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. சர்வ அமாவாசை. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.


சுக்கி
புதன்
சந்தி
சூரிய
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
25.05.2017



ராகு
சனி(வ)
 

               
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  25.05.2017

மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகள் உங்களுக்கு ஆதவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
ரிஷபம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
கடகம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்பு உடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மன மகிழ்ச்சியை தரும்.
கன்னி
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவர். கடன்கள் குறையும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவை இல்லாத வீண் செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
தனுசு
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சனை சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டுதலையும் பெறுவார்கள்.
கும்பம்
இன்று பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
மீனம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.